இனிமேல் வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் லீவு.! உச்சகட்ட குஷியில் தொழிலாளர்கள்.!

இனிமேல் வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் லீவு.! உச்சகட்ட குஷியில் தொழிலாளர்கள்.!



working days reduced

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளின் படி ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நான்கு புதியவிதிகள், கடந்த 2019 -20ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழில் துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம் ஆகியவற்றில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேர பணி என்பது, 12 மணி நேரமாக உயர்த்தப்படும். தினமும், 12 மணி நேரம் பணி செய்பவர்கள், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும். மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஊழியர்களின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 300 நாட்கள் வரை விடுமுறை. புதிய ஊதிய சட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.

இந்த புதிய விதிகளை, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போனது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.