இந்தியா

பெண்களின் கால்களை கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம்..! அதிர்ச்சி வீடியோ..!

Summary:

Women treated bad at west bengal video goes viral

சாலை போடுவதற்கு இடையூறாக இருந்த பெண்ணை கயிறால் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் தினாஞ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் சோமா தாஸ். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் சாலை அமைப்பதற்காக அனைவரிடத்திலும் பேசப்பட்டு அனைவரின் ஒப்புதலுடனும் நிலம் கையகப்படுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

முன்னதாக 12 அடி அகலத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்படும் என கூறப்பதாகவும், ஆனால், ஒரு மடங்கு அதிகப்படுத்தி 24 அடி அகலத்திற்கு சாலை பணிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. தாங்கள் 12 அடி அகல சாலைக்கு மட்டுமே இடம் தருவதாக சம்மதிதாகவும், 24 அடி அகலத்திற்கு இடம் தர முடியாது எனவும் ஸ்மிரிகோனா தாஸ் பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரிடம் முறையிட்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் சாலை பணிகளை தொடர விடாமல் ஸ்மிரிகோனா தாஸ் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதனால் ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் அவரது சகோதரி சோமா தாஸ் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் கயிறால் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்றுள்ளன்னர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement