இந்தியா

கணவருக்காக நர்ஸ் பணியை ராஜினாமா செய்து, உடல் தகன பணியில் ஈடுபடும் மனைவி.!

Summary:

ஒடிசா மாநிலத்தில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார் அவர

ஒடிசா மாநிலத்தில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார் அவரது மனைவி.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தனது கணவரின் சமூக சேவை பணிக்கு உதவியாக இருப்பதற்காக அவரது மனைவி மதுஸ்மிதா பிரஸ்டி என்ற பெண் அவரது நர்ஸ் பணியில் இருந்து விலகியுள்ளார்.  இஅவர் கடந்த 9 ஆண்டுகளாக நோயாளிகளை கவனித்து கொள்ளும் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார்.

மதுஸ்மிதா பிரஸ்டி தற்போது அவரது நர்ஸ் பணியை ராஜினாமா செய்து கணவனுடன் சேர்ந்து இறுதி சடங்குகளை செய்வதில் உதவுவதாகவும் கூறுகிறார். கடந்த 2019 ம் ஆண்டிலிருந்து, கைவிடப்பட்ட உடல்களை கணவனுடன் சேர்ந்து தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் 500 உடல்களை தகனம் செய்துள்ளதாக கூறினார். இந்த பணியை செய்வதில், ஒரு பெண்ணாக பலரது விமர்சனங்களை நான் எதிர்கொண்டேன்.  ஆனால், எனது கணவர் நடத்தி வரும் அறக்கட்டளையின் கீழ் தொடர்ந்து இந்த பணிகளை நான் செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
 


Advertisement