ஆசை ஆசையாக ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்!! பார்சலை திருந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..



Women received towel for chicken

ஹோட்டலில் வருத்த கோழியை ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு வந்த பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்த்த பெண் ஒருவர் அலிக் பெரெஸ். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  இவர்கள் இருவரும் வீட்டில் பசியோடு இருந்து உள்ளனர். பசியை போக்க இருவரும் அங்கு உள்ள பிரபல உணவகம் ஒன்றில் அவர்களுக்கு பிடித்த உணவான வறுத்த கோழியை ஆன்லைன்னில் ஆர்டர் செய்து  உள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பின் ஆர்டர் செய்த பார்சலும் வீட்டிற்கு வந்துள்ளது. இருவரும் பயங்கர பசியோடு இருந்த நிலையில், உணவை பிரித்து பார்த்தனர். அந்த உணவு  பார்ப்பதற்கு ஆர்டர் செய்த வருத்த கோழி போலவும், அதன் நிறம் , தன்மை அனைத்தும் கோழியைப் போன்றே இருந்துள்ளது.

Viral News

இருவரும் சாப்பிட முயன்ற போது, அவரது மகனால் அதை கடித்து சாப்பிட முடியவில்லை. உடனே கைகளால் பிய்த்தும், கத்தியால் வெட்டியும் சாப்பிட முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அதனை சாப்பிட முடியவில்லை. பின்னர் அதை உற்று பார்த்தால்  இறுதியாகத் தான் தெரிந்தது, அது வறுத்த கோழி இல்லை அது ஒரு டவல் என்பது.

இதை கண்டு அதிர்ச்சி மற்றும் பயங்கர கோபமடைந்த  அந்த பெண், இச்சம்பவத்தை ஒரு வீடியோ எடுத்து அதை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. இவர்கள் எப்படி கோழிக்கு  பதிலாக டவலை வறுத்து அதனை டெலிவரி செய்து உள்ளீர்கள். இது நியாயமா? என்று கோவத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுவரை 2.5 மில்லியன் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.