போலீசாக இருக்கும் எனக்கே பாலியல் தொல்லை! மற்ற பெண்களை எப்படி பாதுகாக்க முடியும்? பெண் போலீஸ் குமுறல்!

போலீசாக இருக்கும் எனக்கே பாலியல் தொல்லை! மற்ற பெண்களை எப்படி பாதுகாக்க முடியும்? பெண் போலீஸ் குமுறல்!


women police complaint on higher official

மேலதிகாரிகளால் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பட்டு வருவதாக லக்னோவை சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ரிசர்வ் போலீஸ் பிரிவில் பணியாற்றிவரும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், மேலதிகாரிகள் தனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் கான்ஸ்டபிள் வெளியிட்ட வீடியோவில், "நான் எனது சொந்த காவல் துறையில் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு ஆறுதல்படுத்த முடியும்? நானே பாதிக்கப்பட்டிருக்கும் போது, மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வது பற்றி எப்படி யோசிக்க முடியும்? பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக காவல் துறையில் பனி செய்யும் எனக்கே நீதி கிடைக்கவில்லை என பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.