இந்தியா

வானில் பறந்த விமானத்தில் திடீரென பற்றி எரிந்த தீ.! 185 பயணிகளுடன் விமானத்தை சாதுரியமாக தரையிறக்கிய பெண் விமானி.!

Summary:

வானில் பறந்த விமானத்தில் திடீரென பற்றி எரிந்த தீ.! 185 பயணிகளுடன் விமானத்தை சாதுரியமாக தரையிறக்கிய பெண் விமானி.!

185 பயணிகளுடன் பாட்னாவிலிருந்து டெல்லிக்கு நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  

பல நிமிடங்கள் காற்றில் பறந்த அந்த விமானம், பிறகு பாட்னா விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர்.
 


விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்து பழுதடைந்த விமான எஞ்சினை முற்றிலுமாக அணைத்துவிட்டு, புத்திசாலித்தனமாக செயல்பட்டு யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் தரையிறக்கியது கேப்டன் மோனிகா கண்ணா எனும் பெண் விமானி என்பது தெரியவந்துள்ளது.185 பயணிகள் சென்ற தீப்பிடித்த விமானத்தை சாதுரியமாக தரையிறக்கிய பெண் விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றனர்.


Advertisement