அடக்கடவுளே.. அதற்காக இப்படியா?? 3 வருடமாக மகனுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்.! இதுதான் காரணமா?? அதிர்ச்சி சம்பவம்!!

அடக்கடவுளே.. அதற்காக இப்படியா?? 3 வருடமாக மகனுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்.! இதுதான் காரணமா?? அதிர்ச்சி சம்பவம்!!


women-locked-inside-the-home-with-son-for-corono-fear

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் சுஜன் மாஜி. அவரது மனைவி முன்முன் மாஜி. அவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின் போது மிகவும் பயந்து போன முன்முன் மாஜி தனிமனித இடைவெளி, சமூக விலகல் போன்றவற்றை மிகவும் தீவிரமாக கடைபிடித்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்கு வந்து நாடு முழுதும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் கூட முன்முன் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவன் சுஜன் எவ்வளவோ கூறியும் அதை அவர் கேட்கவில்லை. போக போக சரியாகிவிடுவார் என எண்ணி சுஜன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் திரும்பிவந்த கணவரை முன்முன் மாஜி வீட்டிற்குள் விடாமல் கதவை பூட்டிக் கொண்டு மகனுடனேயே இருந்துள்ளார்.  

hariyana

வேறு வழி இல்லாமல் சுஜன் அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, மனைவி மற்றும் மகன்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கதவருகே வைத்துவிட்டு வருவாராம். மேலும் வீடியோ கால் மூலமே அவர்களிடம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சுஜன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வந்து பேசியும் முன்முன் கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வேறு வழியின்றி போலீசார்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை மீட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகளாக பெண் தனது மகனுடன் வீட்டிற்குள்ளே அடைந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.