ஆம்புலன்ஸ் வசதி இல்லை..! பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்.! இந்திய ராணுவம் செய்த நெகிழ்ச்சி செயல்.!

ஆம்புலன்ஸ் வசதி இல்லை..! பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்.! இந்திய ராணுவம் செய்த நெகிழ்ச்சி செயல்.!



women-got-delivery-in-army-van

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நரிகூட் பகுதியில் வசித்து வரும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அந்த ஊரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சுகாதார பணியாளர் சாதியா பேகம் என்பவர் இந்திய ராணு படை பிரிவுக்கு போன் செய்து கர்ப்பிணி பெண்ணுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து இந்திய ராணுவம், வாகனம் ஒன்றை நரிகூட் பகுதிக்கு அனுப்பி வைத்தது.  மருத்துவ குழு ஒன்றும் அந்த வாகனத்தில் சென்றது. நரிகூட் பகுதிக்கு சென்று கர்ப்பிணியை ஏற்றி சென்றனர் அந்த வாகனத்தில் சுகாதார பணியாளரையும் உடன் அழைத்து சென்றனர். 

ஆனால், செல்லும் வழியிலே ராணுவ வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தாய், சேய் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ வாகனத்தில் பிரசவம் பார்த்த சுகாதார பணியாளருக்கு ராணுவ படை தளபதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதி மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.