அந்த ஒரு நொடி பீதியில் உறைந்துபோன உறவினர்கள்!! அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்..

அந்த ஒரு நொடி பீதியில் உறைந்துபோன உறவினர்கள்!! அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்..


Women came back who dumbed in Andhra

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிறிஸ்டியான் பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் கிரிஜம்மா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.

அதேநேரம் கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், அவரும் உயிரிழந்துவிட்டதாக கூறி இருவரின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் 10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட கிரிஜம்மா உயிருடன் அங்கு வந்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில், கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த வேறு ஒருவரின் உடல், இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.