இந்தியா

செல்போனால் உடல் இரண்டு துண்டாகி இறந்த 22 வயது இளம் பெண்! தயவு செய்து இதுமட்டும் செய்யாதிங்க!

Summary:

Woman falls off moving train in hyderabad dies

தொழிநுட்பத்தின் அபார வளர்ச்சி ஒருபக்கம் பலவித நன்மைகளை கொடுத்தாலும் மறுபக்கம் பல்வேறுவிதமான கெடுதல்களையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் குறிப்பான ஓன்று தொலைபேசி. இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை 11 வது விரலாக வந்துவிடந்து இந்த செல்போன். இந்நிலையில் செல்போனால் 22 வயது இளம் பெண் ஒருவர் ரயிலில் தவறி விழுந்து உடல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதராபாத்தை சேர்ந்த அஸ்வினி என்ற இளம் பெண் தினமும் பணிக்காக தனது வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் ஏறி பணிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல அஸ்வினி ரயிலில் பணிக்கு சென்றுள்ளார்.

அஸ்வினி இறங்கும் ரயில் நிலையம் வந்ததும் ரயிலில் இருந்து வேகமாக இறங்கியுள்ளார். அப்போது அஸ்வினி கையில் இருந்த செல்போன் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தவறி விழுந்த செல்போனை எடுக்க அஸ்வினி முற்படும்போது ரைலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் அவரது உடல் சிக்கி இழுத்து செல்லப்பட்டது.

இந்த நிகழ்வு ரயில் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ரயில், பேருந்து போன்றவற்றில் பயணம் செய்யும்போது தயவு செய்து கவனமாக பயணம் செய்யவும்.


Advertisement