நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
"அப்பா... காப்பாத்துங்க ப்ளீஸ்..." பேச மறுத்த பெண்.!! எரித்து கொன்ற இளைஞர்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பேச மறுத்ததால் இளம் பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு தனிப்படை அமைத்துள்ள காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷா சிங். 33 வயதான இவருக்கு திருமணமாகி அமித் சவுகான் என்ற கணவர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஃபரூக்காபாத் பகுதியிலுள்ள தந்தை பல்ராம் சிங்கை பார்த்துவிட்டு மருத்துவமனை செல்வதற்காக சென்றிருக்கிறார். அப்போது நிஷா சிங்கை வழிமறித்த தீபக் என்ற இளைஞர் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் நிஷா சிங் அவருடன் பேச மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபக் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிஷாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றியெரிந்த நிலையில் வலியால் துடித்த நிஷா சிங் தனது ஸ்கூட்டரிலேயே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து பல்ராம் சிங்கை தொடர்பு கொண்ட மருத்துவர், நிஷா சிங் மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!
இதன் பிறகு மருத்துவமனைக்குச் சென்ற பல்ராம் சிங் தனது மகளிடம் விசாரித்த போது, தீபக் என்ற இளைஞர் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை எரித்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறி அழுதிருக்கிறார். மேலும் தன்னை காப்பாற்றும்படி தந்தையிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிஷா சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீபக் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு... கணவன், மகள் கொடூர கொலை.!! காதல் ஜோடி வெறி செயல்.!!