வீட்டில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்! சமைத்து சாப்பிட்ட மனைவி! சோதனையில் வெளியான பகீர் சம்பவம்.

வீட்டில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்! சமைத்து சாப்பிட்ட மனைவி! சோதனையில் வெளியான பகீர் சம்பவம்.


Wife killed husband for illegal relationship

மத்தியபிரதேச மாநிலம், கரோண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பனவால். இவரது மனைவி பெயர் 35 வயதாகும் பிரமிளா. தான் தனது தம்பியின் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் தனது தம்பியின் மனைவி பிரமிளா தன்னை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுப்பதாகவும், தனது தம்பியை காணவில்லை என்றும் மகேஷினின் அண்ணன் அர்ஜுன் பனவால் காவல் நிலையாயத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், பிரமிளாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் அக்கம் பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பிரமிளாவின் வீட்டை சோதனை செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Crime

தனது கணவனை கொலை செய்து வீட்டின் சமையல் அறையில் அவரது சடலத்தை வைத்திருந்ததோடு கடந்த 10 நாட்களாக அதே சமையல் அறையில் சமைத்து சாப்பிட்டுவந்துள்ளார் பிரமிளா. இதுகுறித்து அவர் கூறுகையில், கங்காரம் என்பவரின் மனைவியுடன் தனது கணவருக்கு தொடர்பு இருந்ததாகவும் தான் பலமுறை கூறியும் அவர் அதனை கைவிடவில்லை.

இதனால் கங்காரமுடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ததாகவும், அவரது உடலை வீட்டின் சமயல் அறையில் மறைத்துவைத்தாகவும் பிரமிளா தெரிவித்துள்ளார். மனைவியே தனது கணவனை கொலை செய்து வீட்டின் சமையல் அறையில் மறைத்துவைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.