தூக்க மாத்திரை, மின்சார கம்பி... திடீர் மரணமடைந்த 35 வயது நபர்! 20 நாட்களுக்கு பிறகு அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

தூக்க மாத்திரை, மின்சார கம்பி... திடீர் மரணமடைந்த 35 வயது நபர்! 20 நாட்களுக்கு பிறகு அம்பலமான அதிர்ச்சி பின்னணி!


wife-killed-husband-for-illegal-affairs-84B7KH

ராஜஸ்தான் பார்மெர் மாவட்டத்தைச் சேர்ந்த டீன்கர்த் என்ற பகுதியில் வசித்து வந்தவர் மனராம். இவரது மனைவி பாப்பு தேவி. கடந்த ஜூன் மாதம்15ஆம் தேதி பாப்புதேவி மனராமின் சகோதரருக்கு போன் செய்து தனது கணவர் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு  அவரது குடும்பத்தினர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்துள்ளனர். அங்கு மனராம் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் மனராமனின் காலில் ரத்தகாயம் இருப்பதை கண்ட உறவினர்கள் என்ன நடந்தது என பாப்புதேவியிடம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர் கணவருக்கு மின்சாரம் தாக்கிவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனராமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து  அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. 

Murder

 ஆனாலும் மனராமின் குடும்பத்தாருக்கு அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருந்துவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் பாப்புதேவியிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அவர் தான்தான் கணவரை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு ஹனுமன்ராம் என்பவருடன் பழக்கம் இருந்தது. அதுகுறித்து எனது கணவருக்கு தெரியவந்த நிலையில், அவர்  தங்களுக்கு இடையூறாக இருப்பார் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். 

அன்று முதலில் தூக்க மாத்திரைகளை கொடுத்து, அவரை மயக்கமடையச் செய்து பின்னர் மின்சார கம்பியை அவர் மீது வைத்து கொன்றோம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இதுகுறித்து மனராமின் சகோதரர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹனுமன்ராம் மற்றும் பாப்புதேவி இருவர் மீதும்  வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.