வேறு பெண்ணுடன் இருந்த கணவர்! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்து மனைவி செய்த விபரீத செயல்.!

வேறு பெண்ணுடன் இருந்த கணவர்! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்து மனைவி செய்த விபரீத செயல்.!


wife-commit-suicide-for-husband

கருநாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் அருண்குமார் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அருண்குமாருக்கும், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை அருண்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்குமார், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கும், அருண்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது ரஞ்சிதாவிடம் அருண்குமார் நீ தேவையில்லை கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா தனது சகோதரனுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்ய போவதாக கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பயந்த அருண்குமார் விஷம் குடித்துள்ளார், இதனையடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.