உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் உடலை அவசரமாக எரித்தது ஏன்? அதிரடியாக களமிறங்கிய தேசிய பெண்கள் ஆணையம்.!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் உடலை அவசரமாக எரித்தது ஏன்? அதிரடியாக களமிறங்கிய தேசிய பெண்கள் ஆணையம்.!



why-the-teenage-body-was-burned-in-a-hurry

உத்திரப்பிரதேசத்தில் 19 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூர சம்பவத்தால் மரணமடைந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசார் அவசரமாக தகனம் செய்தது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.. 

காவல்துறை தரப்பில் உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், உடல் உடனடியாக எரிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் யாரையோ காப்பாற்ற அரசும், காவல்துறையும் இது போன்று செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், உயிரிழந்த இளம்பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு, நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு போலீசார் அவசரம் காட்டியது ஏன்? என்பதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.