இரும்புகம்பியில் துணி காயவைக்கும் பழக்கத்தால் சோகம்.. தாய், தந்தை, மகன், மகள் என 4 பேர் பலியான பரிதாபம்..!

இரும்புகம்பியில் துணி காயவைக்கும் பழக்கத்தால் சோகம்.. தாய், தந்தை, மகன், மகள் என 4 பேர் பலியான பரிதாபம்..!


whole-family-death-by-current-shock

இரும்புகம்பியில் ஈரத்துணிகளை காயவைத்த சமயத்தில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் பர்வீன். இவரின் கணவர் அகமது. தம்பதிகளுக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் என்ற மகளும் இருக்கின்றனர். பர்வீன் தனது வீட்டில் உள்ள துணிகளை துவைத்து சுவரில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாயவே, அவர் உயிருக்கு துடிதுடித்துள்ளார். 

இதனை கண்ட அதிர்ச்சியடைந்த அகமது தனது மனைவியை காப்பாற்ற சென்று அவரும் மின்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாய், தந்தை இருவரும் மின்சாரத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த மகன், மகள் அவர்களை காப்பாற்ற சென்றதில், மொத்தமாக 4 பேரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான தகவலறிந்த தெலுங்கானா அரசு, குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்து, தனது இரங்கலை பதிவு செய்துள்ளது. 

மின்சார தாக்குதலால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பின் அவரை பாதுகாக்க மின்சாரத்தை கடத்தாத பொருட்களைக் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு பிளாஸ்டிக், மரக்கட்டை போன்றவற்றை உபயோகம் செய்ய வேண்டும் என்றும், மின்வாரிய பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.