ஏர் இந்தியா என்ற பெயரை வைத்தது யார் தெரியுமா.? டாடா நிறுவனம் வெளியிட்ட விளக்கம்... வைரலாகும் ட்வீட் பதிவு.!

ஏர் இந்தியா என்ற பெயரை வைத்தது யார் தெரியுமா.? டாடா நிறுவனம் வெளியிட்ட விளக்கம்... வைரலாகும் ட்வீட் பதிவு.!


Who choose air india name in beginning

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு ஏற்கனவே முறைப்படி, டாடா குழுமத்திடம் பரிமாற்றம் செய்திருந்தது. இதையடுத்து கடந்த மாதம் 27ம்தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியா என்ற பெயரை யார் வைத்தது என்பது தொடர்பான விளக்கத்தை டாடா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் 1946-ம் ஆண்டு டாடா நிறுவன ஊழியர்களிடமே இதற்கான கருத்துக்கணிப்பு நடத்துக்கையில், இந்தியன் ஏர்லைன்ஸ், பான்-இந்தியன் ஏர்லைன்ஸ், டிரான்ஸ்-இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய 4 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு அவர்களிடம் வாக்கு பட்டியல் நடத்தியுள்ளனர்.

அப்போது அதிகபட்சமாக 72 வாக்குகள் ஏர் இந்தியாவுக்கும், 58 வாக்குகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற பெயருக்கும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் விமான நிறுவனத்துக்கு ‘ஏர் இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவலை டாடா நிறுவனம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.