கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
திடீரென்று இரத்த கலரில் மாறிய 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரி..! என்ன காரணம் தெரியுமா..?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரியில் உள்ள நீர் திடீரென அடர் பிங்க் நிறமாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த லோனார் கிராடர் ஏரி. இந்த ஏரி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரி என கூறப்படுகிறது. இந்த ஏரி சுமார் 113 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் இந்த ஏரியில் தற்போது அதில் உள்ள நீர் அடர் பிங்க் நிறத்தில் மாறியுள்ளது.
ஏரியின் நீர் பிங்க் நிறத்தில் மாறியது குறித்து அந்த பகுதி வாசிகள் ஏரியினை புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். ஏரிக்கு சென்று நீரை சேமித்த அதிகாரிகள் ஏரியின் நீர் திடீரென பிங்க் நிறத்திற்கு மாறியது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சில அதிகாரிகள், கடந்த ஆண்டும் இதேபோன்று ஏரியின் நீர் பிங்க் நிறத்திற்கு மாறியதாகவும், ஆனால் இந்த அளவிற்கு அப்போது அடர் பிங்க் நிறத்திற்கு மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், கோடைகாலம் என்பதால் ஏரியில் நீர் இருப்பு குறைந்து உப்புத்தன்மை அதிகரித்திருக்கலாம் எனவும், ஒருசில பாசிகள் படர்வதாலும் இதுபோன்று நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.