ஊரடங்கால் வீடு திரும்ப முடியாத கணவர்.. தனிமையில் இருந்த கண் தெரியாத பெண்ணை கற்பழித்த மர்ம நபர்!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தனிமையில் இருந்த கண் தெரியாத பெண்ணை மர்ம நபர் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த குடும்பத்தினர் ராஜஸ்தானிற்கு சென்று வீடு திரும்ப முடியாமல் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த கண்பார்வை இழந்த 53 வயது பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த பெண் வங்கியில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் அந்த பெண் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தான் துங்கிக்கொண்டிருந்த பொழுது அறைக்குள் நுழைந்து தன்னை கற்பழித்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.