நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
ஆட்டம்னா இதுல்ல ஆட்டம்! பெண்கள் கூட்டத்தில் இளைஞர் ஆடிய அசத்தல் நடனம்! பொண்ணுக கூட தோத்துடும் போங்க... வைரலாகும் வீடியோ!
இணையத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பரவி வருகின்றன. அதில் தற்போது ஒரு இளைஞன் ஆடிய நடன வீடியோ வைரலாகி, சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்துள்ளது. எந்த இடமாக இருந்தாலும் திறமை வெளிப்படும் என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது.
கிராமப்புற இளைஞனின் அசத்தல் ஆட்டம்
இன்ஸ்டாகிராமில் @corporate_vala0001 என்ற கணக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில், ஒரு திறந்தவெளி முற்றத்தில் பெண்கள் அமர்ந்திருந்தபோது, பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞன் இசைக்கேற்ப நடனமாடத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக இருந்த நடனம், இசை உச்சத்தை எட்டியவுடன் மின்னல் வேகத்தில் மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
உணர்ச்சியுடன் கூடிய அசைவுகள்
அவரது முகபாவனைகள், கண்கள் மற்றும் கைகளின் நுணுக்கமான அசைவுகள் பாடலுக்கு உயிர் கொடுத்தது. குறிப்பாக, பெண்ணைப் போல வெட்கத்துடன், நாணத்துடன் ஆடிய தருணங்கள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தின. இதனால், "இவனுக்கு ஹீரோயின் ரோலே கொடுக்கலாம்!" என்று பலர் கலகலப்பாகக் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மின்னல்கள் பாயும் லைட் ஷோ! இப்படி ஒரு ஸ்கூட்டியா? பைக் முழுவதும் மின்னும் விளக்குகள் மையத்தில் 55 இன்ச் LED ஸ்க்ரீன்! வைரலாகும் வீடியோ...
சமூக வலைதளத்தில் வைரல்
இந்த Viral Dance வீடியோவை பார்த்தவர்கள், இவரது திறமையை பாராட்டி, சினிமாவிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். கிராமப்புறத்தில் வெளிப்பட்ட இந்த திறமை, இணையத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இளைஞனின் ஆட்டம், கனவுகளை அடைய தடைகள் எதுவுமில்லை என்பதையும், திறமைக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பே வெற்றிக்கான கதவுகளைத் திறக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: இந்த வயசுலயே எம்புட்டு அறிவா பேசுது! குழந்தையின் மழலை பேச்சில் மனம் மகிழ்ந்த இணையவாசிகள்! வைரலாகும் வீடியோ...