மேற்கு வங்கத்தில் வன்முறை பதற்றம்... இந்திய மதச்சார்பற்ற முன்னணி நடத்திய போராட்டத்தில் வன்முறை...!!

மேற்கு வங்கத்தில் வன்முறை பதற்றம்... இந்திய மதச்சார்பற்ற முன்னணி நடத்திய போராட்டத்தில் வன்முறை...!!


Violent tension in West Bengal... Violence in the protest held by the Indian Secular Front...

மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசியல் கட்சி இந்திய மதச்சார்பற்ற முன்னணி. இது இஸ்லாமிய மத போதகர் அப்பாஸ் சித்திக் என்பவரால் தொடங்கப்பட்டது. அப்பாசின் இளைய சகோதரனான நவ்சத் சித்திக், பகன்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். 

கட்சியின் தலைவராக, அப்பாஸ் அவரது இளைய சகோதரனான நவ்சத் சித்திக்கை நியமித்தார். இதனிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பகன்கர் பகுதியில் அப்பாசின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி நிர்வாகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினர், எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊர்வலமாக டொரினா கிராசிங் பகுதியில் சாலையில் சென்ற போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட கார், பைக்கை போன்ற வாகனங்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்கல், கட்டையை கொண்டு தாக்கினர். 

இதனால், அந்த பகுதி வன்முறை களமாக மாறியது. உடனடியாக கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர்  கைது செய்தனர். 

இந்த வன்முறையை கலவரத்தை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்று காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.