நீ சூனியக்காரி! ஒட்டுமொத்த கிராமத்தால் ஒதுக்கப்பட்ட 65 வயது விசித்திர பாட்டி! வெளியான அதிர்ச்சி காரணம்!
நீ சூனியக்காரி! ஒட்டுமொத்த கிராமத்தால் ஒதுக்கப்பட்ட 65 வயது விசித்திர பாட்டி! வெளியான அதிர்ச்சி காரணம்!

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் கடப்படா என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமாரி நாயக். 65 வயதாகும் இந்த மூதாட்டிக்கு பிறக்கும்பொழுதே 12 கை விரல்கள், ஒரு காலில் 10 என இருகால்களிலும் 20 விரல்கள் உள்ளது. ஆனால் பிறவியிலேயே இத்தகைய குறையுடன் பிறந்த குமாரி நாயக்கை அந்த ஊர்மக்கள் சூனியக்காரி என்று கூறி ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இதனால் ஊரில் யாருடனும் சகஜமாக பேசிபழக முடியாமல் குமாரி நாயக் வேதனை அடைந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து குமாரி கூறுகையில், தனது கை மற்றும் கால்களில் அதிகமாக உள்ள விரல்கள் எனது பிறவியிலேயே ஏற்பட்ட குறை. ஆனால் எங்கள் ஊரில் வசித்து வரும் மூடநம்பிக்கை நிறைந்த மக்கள் அனைவரும் இதை பற்றி யோசிக்கவே இல்லை. என்னை ஒரு சூனியக்காரி என்றே எண்ணுகின்றனர். மேலும் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.எனக்கு இது ரொம்ப வேதனையாக உள்ளது.
இந்த குறையை சரி செய்ய எனக்கு போதிய வசதி இல்லை. மேலும்
அவர்கள் என்னை பார்க்கும் பார்வையை ஏற்று கொள்ள முடியவில்லை. என்று குமாரி வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் இதனாலேயே அவர் வீட்டை விட்டே வெளியே போவது கிடையாது.
மேலும் இந்த குறைபாடு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பிறவிக் குறைப்பாடு. இது மாதிரியான பாதிப்பு 5,000 பேரில் ஒருவருக்கு மட்டும் ஏற்படும் என கூறியுள்ளனர்.