நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
இப்படி கூட சாவு வருமா! விளையாடி கொண்டிருந்த7 வயது சிறுவன்! உயிரை பறிக்க நொடியில் பறந்து வந்த எமன்! செம்பாக்கத்தில் சோகமும் பரபரப்பும்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்பாக்கம் பகுதியில் நிகழ்ந்த துயரமான சம்பவம், ஊரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டு பின்புறம் இருந்த ஒரு தென்னை மரத்திலிருந்து விஷத்துடன் கூடிய குழவிகள் திடீரென கொட்டியதால், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் அர்த்தினேஷ், அருகிலுள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்று வந்தார். சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இருந்து திடீரென ஒரு மட்டை விழுந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வந்த விஷ குழவிகள் அருகிலிருந்த 7 பேர்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
சம்பவ இடத்தில் பெரும் பீதியில் ஓடிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், காயமடைந்தவர்களை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 7 வயது அர்த்தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆறு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: 4- ஆம் வகுப்பு சிறுவனுக்கு தெருவில் விளையாடிய போதே விபரீதம்.. துள்ள துடிக்க பறிபோன உயிர்.!
இச்சம்பவம் செம்பாக்கம் மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது அதிகமாகியுள்ளது.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை! திடீரென காணவில்லை! தேடிய தாய்... தெரிந்த கால்! அதிர்ச்சிகரமான சம்பவம்...