மருத்துவமனையில் பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷ் எப்படியுள்ளார்! தீயாய் பரவும் அவரது புகைப்படம்!!

மருத்துவமனையில் பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷ் எப்படியுள்ளார்! தீயாய் பரவும் அவரது புகைப்படம்!!


vava-suresh-in-hospital-photo-viral

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.  இதுவரை அவர ராஜநாகம் மற்றும் அரிய வகை பாம்புகள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்துள்ளார்.  இந்நிலையில் அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிற்குள் பாம்பு பதுங்கியிருப்பதாக அவருக்கு தகவல் வந்துள்ளது.

பின்னர் அங்கு விரைந்த சுரேஷ் அந்த நாகபாம்பை மிகவும் லாவகமாக பிடித்து பைக்குள் போட முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பாம்பு அவரது முழங்காலில் கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் வாவா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மீண்டு வர பலரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Vava suresh

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வாவா சுரேஷ்க்கு தற்போது சுயநினைவு திரும்பி மருத்துவர்  மற்றும் செவிலியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் வாவா சுரேஷின் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது கையினை உயர்த்தி காட்டியுள்ளார்.