மருத்துவமனையில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை திருடிச்சென்ற திருடன்.! ஆனால் திருடனுக்கு நாட்டு மக்கள் மீது இருந்த அக்கறையை பார்த்தீர்களா..!!vaccine-theft-in-hariyana

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 182 கோவிஷீல்ட் மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி மருந்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மருந்து குடுவைகள் அனைத்தும் ஒரு பையில் போட்டு ஜிந்த் காவல்நிலையத்தின் வெளியே கிடந்துள்ளது.

தடுப்பூசி மருந்துகள் திருடுபோன சில மணி நேரம் கழித்து ஜிந்த் காவல்நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு டீ கடையின் வெளியே கிடந்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட பைக்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை பார்த்து பலரும் திகைத்தனர்.

அந்த நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள், இது கொரோனா தடுப்பூசி என எனக்கு தெரியாது என திருடன் எழுதி வைத்துள்ளான். நாட்டின் நிலைமையை புரிந்துக்கொண்டு திருடிய மருந்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த திருடன், அதை திருப்பி வைத்துச் சென்றது நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.