கண்டதும் காதல்.. பீட்சா ஆர்டர் செய்த பெண்ணுக்கு ப்ரபோசல்; வேலையை இழந்த உணவு டெலிவரி இளைஞர்.!UttarPradesh Dominos Pizza Ordered Women getting proposal by Delivery boy

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டாமினோஸ் செயலி மூலமாக தனக்கு தேவையான பீட்சாவை ஆர்டர் செய்துள்ளார். பீட்சா டெலிவரி செய்த கபீர் என்ற நபர் மறுநாள் பெண்ணை வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு தான் உங்களை காதலிக்கிறேன் என்று காதல் மொழி பேசியுள்ளார்.

Uttar pradesh

இதனால் அந்த பெண்மணி சம்பந்தப்பட்ட நபரின் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் டாமினோஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதனையடுத்து அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட இளைஞரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.