நடுரோட்டில் கேக் வெட்டி அலப்பறை செய்த பெண்கள்; மதுபோதையில் சர்ச்சை செயல்.!Uttar Pradesh Women Gang Celebrate Birthday Party in Road When Liquor Drinking 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சுஹானாபூர் பகுதியில் வசித்து வரும் 3 பேர் கொண்ட கும்பல், நடுவீதியில் மதுபானம் அருந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மதுபோதையில் இவர்கள் செய்த அலப்பறையை கண்ட சிலர் கண்டிக்க, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், பெண்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பெண்களின் பெற்றோரை வரவழைத்து கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.