
சிறுத்தை தாக்கி 3 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வனப்பகுதி அருகேயிருக்கும் கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள பகாதியா தீவான், மங்கலபூர்வா கிராமத்தில் 2 குழந்தைகள் சிறுத்தை தாக்குதலால் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கதர்ணியாகாட் வனப்பகுதியில் உள்ள மோதிப்பூர் கிராமத்தில் 12 வயது சிறுமி நேற்று சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 12 வயது சிறுமியான சோனி வயல் வெளியில் நின்றுகொண்டு இருக்கையில் சிறுத்தை தாக்கியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் வந்து சிறுத்தையை விரட்டியபின், அது மீண்டும் வனத்திற்குள் சென்றுள்ளது.
இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், வனத்துறையினரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். கிராம மக்களிடம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிலையில், மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement