15 வயது தலித் சிறுவனின் மீது ஜாதிய தாக்குதல்.. பாதத்தை., நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்.!Uttar Pradesh Dalit Child Tortured by Upper Caste Person

தலித் சிறுவனை மற்றொரு உயர்ஜாதி இளைஞன் பாதத்தை நக்க வைத்ததாக பேரதிர்ச்சி வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியில் 15 வயது தலித் சிறுவன் தனது தாயாருவன் வசித்து வருகிறார். இவருக்கு தந்தை இல்லை. இந்த நிலையில், சிறுவனை இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருக்கும் உயர்ஜாதி இளைஞன் ஒருவன், தனது பாதத்தை நக்க வேண்டும் என்று மிரட்டி சிறுவனை துன்புறுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

Uttar pradesh

மேலும், சிறுவன் தனது உயிருக்கு அஞ்சி நடுங்க, உயர்ஜாதி இளைஞனுடன் இருப்பவர்கள் கைகொட்டி சிரித்து சிறுவனை மேலும் பயத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, உயர்ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.