ஹோட்டல் அறைக்குள் கள்ளகாதலியுடன் உல்லாசம்.. கணவனை செருப்பால் அடித்து நொறுக்கிய மனைவி.. வீடியோ எடுத்த மச்சான்.. பகீர் சம்பவம்.! 

ஹோட்டல் அறைக்குள் கள்ளகாதலியுடன் உல்லாசம்.. கணவனை செருப்பால் அடித்து நொறுக்கிய மனைவி.. வீடியோ எடுத்த மச்சான்.. பகீர் சம்பவம்.! 


uttar-pradesh-agra-wife-beat-husband-he-enjoy-with-affa

கள்ளகாதலியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்த கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி, இருவரையும் அடித்து நொறுக்கி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெண்மணி ஒருவர், தனது கணவர் மற்றும் அவரின் கள்ளக்காதலியை விடுதி அறைக்குள் வைத்து தாக்குவது தொடர்பான வீடியோ கடந்த புதன்கிழமையின் போது வைரலானது. இந்த வீடியோ குறித்த தகவல் காவல் துறையினருக்கும் தெரியவந்தது. 

இதனையடுத்து, வீடியோ குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், வீடியோவில் இருக்கும் ஆண் நபர் உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தினேஷ் கோபால் என்பதை உறுதி செய்தனர். இவரின் மனைவி நீலம். இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில், தினேஷுக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் நிலத்திற்கு தெரியவரவே, அவர் கணவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி டெல்லி கேட் பகுதியில் செயல்படும் விடுதி அறைக்கு செல்ல, அங்கு தனது சகோதரருடன் சென்ற நீலம் கணவர் மற்றும் அவரின் பெண் தோழியை செருப்பால் அடித்து நொறுக்குகிறார். இதுகுறித்த விடீயோவையும் தனது சகோதரர் மூலமாக பதிவு செய்து வைத்துக்கொள்கிறார். அடிபட்ட கணவனோ தன்னை விட்டுவிடும் படி கதறியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய மனைவி மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.