கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் பரிதாப பலி; துண்டுதுண்டாகிப்போன உடல்கள்.!Uttar Pradesh Agra 14 Aged Boy Died Stuck into Wheat Cutter 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, பதேகாபாத், பிலயா கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் கிஷோர். இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான வயலில், கோதுமை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 

அச்சமயம், நிகழ்விடத்தில் காற்று வீசிய காரணத்தால் தார்பாய் ஒன்று, அறுவடை இயந்திரம் செயல்பட்டு கொண்டு இருந்த இடத்திற்கு பறந்துளளது. அதனை சிறுவன் எடுக்கச்சென்றதாக தெரியவருகிறது. 

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் அறுவடை எந்திரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் உடல் பல பாகமாக துண்டிக்கப்பட்டு பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.