அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்; பென்சிலால் விளைந்த பெருந்துயரம்.. பெற்றோரே கவனமாக இருங்கள்.!
வாயில் ஷார்ப்னர் வைத்து பென்சில் சீவிய 6 வயது சிறுமி மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் ஆர்த்திகா என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 6 ஆகிறது. மாணவி வீட்டின் மொட்டை மாடியில் தன் உடன் பிறந்த சகோதரர் அபிஷேக் மற்றும் ஹன்சிகாவுடன் அமர்ந்து எழுதிக் கொண்டு இருந்துள்ளார்.
வீட்டுப்பாடம் செய்வதற்காக சிறுமி பென்சிலை எடுத்து ஷார்ப்னரை வாயில் வைத்துக் கொண்டு பென்சிலை சீவி உள்ளார். அப்போது, பென்சிலின் தோல் சிறுமியின் தொண்டைக்கு சென்று மாட்டிக்கொண்டுள்ளது.

இதனால் அந்த சிறுமிக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை மருத்துவர்கள் சோதித்துவிட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.