திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி; வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சியளித்த சிறுமிகள்..!

திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி; வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சியளித்த சிறுமிகள்..!


upset-at-marriage-being-fixed-2-teen-sisters-leave-home

சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சித்ததால் அக்கா-தங்கை வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள ஹட்கோபுர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது அக்கா- தங்கைகளுக்கு அவர்களின் பெற்றோர் மணமகங்களை தேர்வு செய்ததுடன் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டனர். இந்த திருமணத்தில் விருப்பமில்லாத அக்கா- தங்கையான சிறுமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிறுமிகளின் எதிர்ப்பையும் மீறி திருமணம் ஏற்பாடுகளை அவர்களது பெற்றோர் செய்து வந்தனர். இதனால், தங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்த 21 வயதான இளைஞனுடன் சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். சிறுமிகள் காணமல் போனது குறித்து, சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிகளை கடத்தி சென்றதாக 21 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்ற சிறுமிகள் இருவரும் 6 நாட்களுக்கு பிறகு நேற்று வீடு திரும்பினர். சிறுமிகளுடன் சென்ற 21 வயது இளைஞரும் அவர்களுடன் திரும்பி வந்தார். இதனை தொடர்ந்து சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் அந்த இளைஞர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.