பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி.!! போலீஸ் தீவிர விசாரணை.!!



up-nursing-student-ends-life-by-jumping-from-college-bu

உத்திரபிரதேசத்திலுள் தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில்  நர்சிங் பயின்று வந்த தீக்ஷா பால் என்ற மாணவி செப்டம்பர் 18 அன்று மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பல் மாவட்டத்திலுள்ள அஸ்மோலியாவை சேர்ந்த தீக்ஷா பால் என்ற மாணவி இங்கு நர்சிங் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 18) கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

India

இதுதொடர்பான விசாரணையில், தீக்ஷா கல்லூரிக்கு பேருந்தில் வந்த 16 மாணவர்களுடன் மதியம் 2 மணிக்கு தேர்வெழுத புறப்பட்டுள்ளார். பரிட்சை முடிந்ததும் மற்ற மாணவர்கள் வெளியேறினர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு தீக்ஷா ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணமுள்ளதா.? என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!

இதையும் படிங்க: கொலையில் முடிந்த லவ் டார்ச்சர்... திருமணமான பெண் பலி.!! வாலிபர் கைது.!!