என் அப்பாவை விடுங்கள்.. வாகனத்தில் முட்டி மோதி கதறிய சிறுமி.. கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி

என் அப்பாவை விடுங்கள்.. வாகனத்தில் முட்டி மோதி கதறிய சிறுமி.. கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி


UP girl saved her firecracker seller father from police viral video

தடையை மீறி பட்டாசு கடை வைத்தவரை போலீசார் கைது செய்தபோது அந்த நபரின் சிறுவயது மகள் போலீஸ் வாகனத்தில் முட்டி மோதி தனது தந்தையை விடுமாறு கெஞ்சிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அரசு அனுமதி வழங்கிய நேரங்களில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

viral video

இந்த தடையை மீறி உத்திரபிரதேச மாநிலம் குர்ஜா என்ற இடத்தில் கடந்த 12ஆம் தேதி நபர் ஒருவர் பட்டாசு கடை திறந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட போலீசார் அந்த இடத்திற்கு சென்று பட்டாசுக்கடை வைத்தவரை கைது செய்தனர். அவரை கைது செய்ய அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே தனது தந்தையை போலீசார் கைது செய்து அழைத்துச்செல்வதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த நபரின் மகள் தனது தந்தையை விடுமாறு போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் போலீசார் அந்த நபரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியதை அடுத்து அந்த சிறுமி போலீஸ் வாகனத்தில் தனது தலையால் முட்டி மோதி தனது தந்தையை விடுமாறு கெஞ்சியது பார்ப்போரை கண்ணீர் சிந்த வைத்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த நபரை விடுதலை செய்யுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை விடுதலை செய்தனர். அதுமட்டும் இல்லாமல் தீபாவளி தினத்தன்று காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் இல்லத்துக்கு சென்று இனிப்புகளை வழங்கி அந்த சிறுமியுடன் தீபாவளியை கொண்டாடினர்.

காவல்துறை மீது சிறுமிக்கு தவறான கண்ணோட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இனிப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

viral video

viral video