கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் அமைச்சர் அமித்ஷா.. மகிழ்ச்சியில் பாஜக தொண்டர்கள்.!

கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் அமைச்சர் அமித்ஷா.. மகிழ்ச்சியில் பாஜக தொண்டர்கள்.!


union-home-minister-amit-shah-gets-cured-of-corona-afte

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது பாஜக எம்.பி மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சிகிச்சைக்கு பிறகு அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிங் என வந்துள்ளதாக கூறியுள்ளார்.