வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
இந்தியர்களே தப்பித்தவறியும் இந்த நாட்டில் மேற்படிப்பு வேண்டாம்.. இந்தியா அனுமதிக்காது - யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ எச்சரிக்கை.!
பாகிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொண்டால், அவர்களின் சான்றிதழ் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க வேண்டாம்.
அவ்வாறு பாகிஸ்தானில் படிப்பு மேற்கொண்டால், அந்த சான்றிதழை வைத்து இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற இயலாது. அது இந்தியாவில் செல்லுபடியாகாது. பாகிஸ்தானில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் சான்றிதழுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.