அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட 2 வயது குழந்தை அதிர்ச்சி மரணம்..! கதறும் பெற்றோர்..! அதிர்ச்சி தகவல்.!
பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட 2 வயது குழந்தை அதிர்ச்சி மரணம்..! கதறும் பெற்றோர்..! அதிர்ச்சி தகவல்.!

பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட இரண்டு வயது ஆண் குழந்தை ஓன்று உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ரவி நாராயணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் அமேரிக்கா செல்ல விஷா வாங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளன்னர்.
இந்நிலையில் அமெரிக்கா எம்பசி அருகே உள்ள மானசரோவர் என்ற ஹோட்டலில் கடந்த 10 ஆம் தேதி ரவி நாராயணன் தனது குடுமபத்துடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார். இதனை அடுத்து விஷா சம்மந்தமான வேலைகளை முடித்துவிட்டு அனைவரும் இரவு மீண்டும் ஹோட்டல் திரும்பியநிலையில் இரவு உணவிற்காக ரொட்டி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் ரவி நாராயணாவுக்கும், அவரது 2 வயது மகனுக்கும் வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். நிலைமை மோசமானதை அடுத்து அருகில் இருந்த KIMS மருத்துவமனைக்கு ரவி நாராயணா சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதனிடையே, தங்கள் இரண்டு வயது மகன் சுயநினைவை இழந்துவிட்டதாக ரவி நாராயணாவின் மனைவி போன் செய்து கூறியுள்ளார். இதனை அடுத்து அதே மருத்துவமனையில் குழந்தையையும் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. தாங்கள் சாப்பிட உணவில்தான் பிரச்சனை இருப்பதாக ஹோட்டல் நிர்வாகம் மீது ரவி நாராயண போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உணவு மாதிரியை சோதனைக்கு அனுப்பி உள்ளன்னர்.
மேலும், குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே குழந்தை இறந்ததற்காக காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.