இந்தியா

ஓடும் காரில் இளம் பெண்ணை உரசிய ஓட்டுநர்.! காரில் இருந்து குதித்த மற்ற இரண்டு பெண்கள்! அதிர்ச்சி சம்பவம்.

Summary:

டாக்சியில் சென்றுகொண்டிருந்த பெண்களிடம் ஓட்டுநர் தவறாக நடந்துகொண்டதை அடுத்து காரில் இருந்த பெண்கள் கதவை திறந்துகொண்டு கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்சியில் சென்றுகொண்டிருந்த பெண்களிடம் ஓட்டுநர் தவறாக நடந்துகொண்டதை அடுத்து காரில் இருந்த பெண்கள் கதவை திறந்துகொண்டு கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மூன்று பெண்கள் வாடகை கார் ஒன்றை புக் செய்து அதில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கார் ஓட்டுநர் தவறாக நடந்துள்ளார். அருகில் இருந்த பெண்ணை ஒட்டி, உரசியபடி அவர் காரை ஒட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் நகர்ந்து உட்காந்துள்ளார். அப்போதும் விடாத அந்த ஓட்டுநர் அந்த பெண்ணை மீண்டும் உரசியுள்ளார். இதனை பின் சீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற இரண்டு பெண்களும் டாக்சியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளன்னர்.

இதனை அறிந்த அந்த ஓட்டுநர் காரை வேறு பாதைக்கு திருப்பி, காரின் வேகத்தை அதிகரித்துள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் உடனே காரின் கதவை திறந்துகொண்டு காரில் இருந்து கீழே குதித்துள்ளனர். இரண்டு பெண்கள் காரில் இருந்து கீழே விழுவதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், மற்றொரு பெண் காரில் இருப்பது தெரிந்து, அந்த கால் டாக்சியை துரத்தி பிடித்து அந்த பெண்ணை மீட்டதோடு, கார் ஓட்டுனரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement