இரண்டு தலைக்கொண்ட நாக பாம்பு பிடிப்பட்டது!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..two-head-cobra-found-in-uttarakhand-viral-photos

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிடிப்பட்ட அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் விகாஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூடம் ஒன்றில் அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. பாம்பை பார்த்த அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரரான அடில் மிர்சா என்பவரை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அடில் மிர்சா, இரண்டுதலை கொண்ட அந்த நாக பாம்பை பிடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கடந்த 15 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தொழிலை தான் செய்துவருவதாகவும், இதுவரை இரண்டுதலைக்கொண்ட நாகத்தை பார்த்ததே இல்லை. இதுதான் முதல் முறை என கூறியுள்ளார்.

மேலும், ஒன்னரை அடி நீளம் மட்டுமே இருந்த அந்த பாம்பு பிறந்து இரண்டு வாரமான குட்டி எனவும் அந்த பாம்பை பிடித்த அடில் மிர்சா தெரிவித்துள்ளார். இரண்டுதலை கொண்ட அந்த நாக பாம்பு தற்போது டேராடூனில் வனவிலங்கு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் அந்த பாம்பை சோதனை செய்துவருகின்றனர். பரிசோதனைக்கு பிறகு அந்த பாம்பு வனப்பகுதியில் விடுவதா அல்லது ஆய்வுக் கூட்டத்தில் வைப்பதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டுதலை கொண்ட அந்த நாகத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி கடும் வைரலாகிவருகிறது.