இந்தியா

17 வயது பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 27 வயது பெண் ஆசிரியை.! பதறிய பெற்றோர்.!

Summary:

ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசியராக வேலை செய்து வரும் 27 வயது

ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசியராக வேலை செய்து வரும் 27 வயது பெண் ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வீட்டில் டியூசன் எடுத்து வந்துள்ளார். திருமணமாகி விவாகரத்தான இவர், தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு மாணவர்கள் டியூசன் படிக்க வந்து சென்றுள்ளனர். அங்கு11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் இவரிடம் டியூசன் படிக்க வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி டியூசனுக்கு சென்ற மாணவன், அதன் பின் வீடு திரும்பவேயில்லை. இதனையடுத்து 17 வயது மாணவனின் தந்தை தனது மகன் ஆசிரியையின் வீட்டிற்குச் டியூசனுக்கு சென்று வீடு திரும்பவில்லை. எனவே, ஆசிரியைதான், எனது மகனை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, தங்களது பெண்ணையும் காணவில்லை என்று ஆசிரியையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இருவரும் எங்கு சென்றனர் என்பது பற்றி அறிவதற்காக போன் செய்த போது இருவரது மொபைல் போன்களும் அணைத்து வைக்கப்பட்டும் இருந்தன. 

ஆசிரியையின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்த போது, தங்களுடைய மகள், மாணவனுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், போலீசார் மைனர் சிறுவனை கடத்திவிட்டதாக கூறி, பெண் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவன் 2 மாதத்திற்கு முன்பு தான் டியூசனில் சேர்ந்துள்ளான். அப்போது மற்ற மாணவர்களுக்கு எல்லாம் குறைந்த நேரத்தில் டியூசன் எடுத்துவிட்டு, இந்த மாணவனுக்கு மட்டும், நான்கு மணி நேரம் டியூசன் எடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement