திருச்சி கல்லூரி மாணவருக்கு கொரோனா அறிகுறி.! கேரளாவை சேர்ந்தவர் என தகவல்.!
திருச்சி கல்லூரி மாணவருக்கு கொரோனா அறிகுறி.! கேரளாவை சேர்ந்தவர் என தகவல்.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், திருச்சியில் படித்துவரும் கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடத்தப்பட்டுவரும் சோதனையில், கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்பட்டு 13 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, திருச்சி தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவரும் கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறி இருப்பதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் கண்காணிக்கப்பட்டுவருகிறார். இவர் அண்மையில் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது.