இந்தியா வீடியோ

அடேங்கப்பா கலக்குறாரே.. நடுரோட்டில் போலீஸ் செய்த செயலால் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள் ,வைரலாகும் வீடியோ .!

Summary:

நடுரோட்டில் போலீஸ் செய்த செயலால் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள் ,வைரலாகும் வீடியோ .!

காவலர் ஒருவர் நடனமாடிக்கொண்டே சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சந்திரா கந்தவால். 33 வயதாகும் இவர் அப்பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார்.

 பிரதாப் சந்திரா  நடுரோட்டில் அனைவரையும் கவரும் வகையில் நடனமாடிக்கொண்டே சாலை போக்குவரத்தை கட்டுபடுத்தி வருகிறார்.

   

இதுகுறித்து பிரதாப் தெரிவிக்கையில், சாலை போக்குவரத்து விதிகளை மதிப்பது ,பின்பற்றுவது பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது .இந்த நிலையில், எனது நடன அசைவுகளால் அவர்களை ஈர்த்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி முயற்சித்து வருகின்றேன்.

ஆரம்பத்தில் சாலை விதிகளை மீறி சென்ற பொதுமக்கள் தற்போது எனது நடனத்தை பார்த்து விதிகளை மதித்து பொறுமையாக  செல்கின்றனர். மேலும் அவர்கள் சாலை விதிகளை அறியாமலேயே மதித்து செல்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .


Advertisement