வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
உச்சகட்ட சோகம்..! பசியில் கடலைச்செடியை பிடிங்கிய 7 வயது சிறுவனின் உயிரை பறித்த மற்றொரு சிறுவன்.!
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். இந்தநிலையில் அந்த விவசாயி தனது வயலின் காவலுக்கு தனது 12 வயது மகனை அமர்த்தியுள்ளார். இந்தநிலையில், அந்த 12 வயது சிறுவன் தனது வயலில் உள்ள கடலைச்செடி பயிர்களை பறவைகள்- அணில்கள் போன்றவை நாசம் செய்யாமல் இருக்க காவலில் இருந்துள்ளான்.
அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் கொண்டைக்கடலை செடியை வேறோடு பிடிங்கி, அதில் உள்ள கடலையை தின்று கொண்டிருந்தான். இதை பார்த்த 12 வயது சிறுவன் உடனடியாக விரைந்துவந்து அந்த 7 வயது சிறுவனை சரமாரியாக தங்கியுள்ளான். இதில் 7 வயது சிறுவன் மயங்கி கீழே விழுந்தான்.
இதனையடுத்து அந்த 12 வயது சிறுவன் வீட்டிற்குச் சென்று விட்டான். பின்னர் அடுத்த நாள் தனது வயலின் காவலுக்கு 12 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது நேற்று அவன் தாக்கிய அந்த 7 வயது சிறுவன், அதே இடத்தில மயங்கி கிடந்துள்ளான். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அச்சிறுவன் உடனடியாக வீட்டிற்கு விரைந்து அவனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவ பரிசோதனையில் 7 வயது சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.