குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்; வைரஸ் சர்வதேச நிறுவனம் கூறும்.. எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்...!

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்; வைரஸ் சர்வதேச நிறுவனம் கூறும்.. எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்...!



tomato-fever-affecting-children-virus-international-say

இந்தியாவில் கோவிட்-19, குரங்கம்மை, போன்ற தொற்று நோய்கள் பரவி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், தற்போது புதிதாக குழந்தைகளிடையே பரவும் தக்காளி காய்ச்சல் என்ற நோய் அடுத்த அச்சத்தை கிளப்பியுள்ளது. இந்தியாவில் உருவாகியுள்ள இந்த தக்காளி காய்ச்சல் குறித்து சர்வதேச மருத்துவ நாளிதழான லேன்செட் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

தக்காளி காய்ச்சல், கை, பாதம் மற்றும் வாய் நோய் (HFMD) என அழைக்கப்படுகிறது, இது ஒரு அரிய வைரஸ் நோய் ஆகும்.  இந்த வைரஸ் உடல் முழுவதும் சொறி மற்றும் கொப்புளங்களை உருவாக்க கூடியது. உடலில் தோன்றும் கொப்புளங்கள் பார்ப்பதற்கு தக்காளியின் வடிவத்திலும் நிறத்திலும் இருப்பதால், இந்த காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவல் குறித்து லான்செட் நிறுவன அறிக்கையில் கூறியதாவது;-

இந்த காய்ச்சல் முதன் முதலில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பதிவானது. இதுவரை 82 குழந்தைகளை இந்த காய்ச்சல் பாதித்துள்ளது. தற்போது கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவியுள்ளதால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை உஷார் நிலையில் உள்ளன. தக்காளி காய்ச்சலானது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், மிகப்பெரிய தொற்று நோயாக கருதப்படுகிறது.

மனித உடலில் தக்காளி வடிவில் இருக்கும் காயங்களில் இருந்து நீர் வடியும். மேலும், வாயின் உள்பகுதியில் கடும் எரிச்சல் ஏற்படும் என்பதால் குழந்தைகள் சாப்பிடும் போது சிரமமாக இருக்கும். இந்த காய்ச்சல் எளிதில் மற்றொருவருக்கு பரவக் கூடியது. இந்த நோய் பாதித்தவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டு, திரவ வகைகள் உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். அதேபோல, நோயில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.