ஒரே நேரம், ஒரே மரம்; தூக்கில் தொங்கியதோ 3 சகோதரிகள்: அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

ஒரே நேரம், ஒரே மரம்; தூக்கில் தொங்கியதோ 3 சகோதரிகள்: அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!


three-sisters-hanged-themselves-from-the-same-tree-at-t

மத்திய பிரதேச மாநிலம், காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கோட்கேடி என்ற கிராமத்தில் மூன்று சகோதரிகள் ஒரே மரத்தில் ஒரே நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 மூன்று சகோதரிகளும் ஒரே நேரத்தில் மரத்தில்  தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து  உடனடியாக ஜாவர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்,  மூன்று சகோதரிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள் லலிதா, சாவித்திரி, சோனு என்பது தெரிய வந்துள்ளது.

மூன்று சகோதரிகளும் தற்கொலைக்கு முன்பாக கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இதன் காரணமாக, எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்த காரணம் உடனடியாக தெரியவில்லை. எனவே காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.