அட..ச்சீ கொடுமையே.. 3 1/2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! நடத்துனர் கைது.!



three-and-half-year-old-girl-sexually-harassed-in-schoo

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளியின் பேருந்து நடத்துனர் மதன்லால் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் என்ற பகுதியில் அமைந்துள்ள ப்ளே ஸ்கூலில் மூன்றரை வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று வந்த குழந்தையின் உடம்பில் காயங்கள் இருப்பதை கண்ட சிறுமியின் தாயார் அவரிடம் இது குறித்து விசாரணை செய்திருக்கிறார்.

Indiaஅப்போது பள்ளி பேருந்து நடத்துனர் தன்னிடம் அத்துமீறியதாகவும் இதனை வெளியே சொன்னால் அம்மா, அப்பாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Indiaஇந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிறுமியின் மருத்துவ அறிக்கை மற்றும் நடத்துனர் மதன்லால்(34) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பெண் நிர்வாகி ஆகியோரும் விசாரணை வலைதிற்குள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.