குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு சாட்சி.. அதிர்ச்சி சம்பவம்..!



This family is a witness to the fact that drinking spoils drinking.. Shocking incident..!

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் வசித்து வருபவர்கள் கோவிந்த் சோங்கர் - குஷ்பூ தம்பதியினர். கோவிந்த் அப்பகுதியில் பழக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்த் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார் கோவிந்த். இதனால் மனம் உடைந்து போன அவரது மனைவி குஷ்பு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பஞ்ச்கோசி ரயில்வே கிராசிங்கிற்க்கு சென்றுள்ளார்.

UttarPradesh

இதனைத் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வந்த கணவர் கோவிந்த் ரயில்வே ட்ராக்கில் தற்கொலை செய்து கொள்வதாக இருந்த மனைவியை சமாதானம் செய்துள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அவர்கள் இருவர் மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் உடல் சிதறி பலியாயினர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனைவியை சமாதானம் செய்ய சென்ற இடத்தில் ரயில் மோதி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.