இந்தியா

தேர்வு அறையில் மாரடைப்பு 12 ஆம் வகுப்பு மாணவருக்கு நேர்ந்த சோகம்.!

Summary:

thelungana 12th std student heart attack

தெலுங்கானாவில் தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், அமர்பிரீத் பகுதியை சேர்ந்த எம். கோபி ராஜூ (18), அங்குள்ள அரசுப் பள்ளியில்12ம் வகுப்பு படித்து வந்தார். தற்சமயம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோபி ராஜூம் செகந்திரபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுதி வந்துள்ளார்.

வழக்கம் போல் இன்றும் தேர்வுக்கு சென்ற அவருக்கு லேசான நெஞ்சுவலி இருந்துள்ளதாக அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் நண்பர்கள் நீ தேர்வு எழுத வேண்டாம் வீட்டிற்கு சென்று விடு என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்று அவர் கூற அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். 

அதன் பிறகு தேர்வு அறைக்குச் சென்ற அவருக்கு நெஞ்சு வலி அதிகரித்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த விவாகரம் தொடர்பாக பேசிய மருத்துவர்கள், எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு மாணவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு காரணமாக மாணவருக்கு அழுத்தம் அதிகாரித்து, அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் குழு சந்தேகம் தெரிவித்துள்ளனர். 


Advertisement