அடிப்பாவி... பெத்த குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்.. கணவர் புகாரால் பரபரப்பு.!the-woman-who-sold-the-baby-for-800-rupees-husband-comp

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் தனது குழந்தையை இன்னொரு ரூபாய்க்கு  விற்று அவலம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில்  குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கராமி முர்மு என்ற பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள்  உள்ளனர். முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது பெண் குழந்தையை பிறந்ததால் மிகுந்த விரக்தியில் இருந்திருக்கிறார் அவர். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டாவது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.

India

இதனைத் தொடர்ந்து பிப்ரசரன்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த புலாமனி - மராண்டி என்ற தம்பதியினருக்கு தனது எட்டு மாத கைக்குழந்தையை விற்றுள்ளார். மேலும் கிராமத்தில் இருந்து அவர்கள் கேட்டதற்கு தனது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் வேலை செய்துவிட்டு திரும்பிய அவரது கணவர் தனது இரண்டாவது குழந்தை பற்றி கேட்கும் போது  குழந்தை இறந்ததாக கூறியுள்ளார்.

India

இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர்  தனது மனைவியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்  கராமி  முர்முவை பிடித்து விசாரித்ததில் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.